மஹிந்தவை சந்தித்த ஐக்கியத் தேசியக் கட்சியை சேர்ந்த பிரபலம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கியத் தேசியக் முன்னணியில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சர் ஒருவர் கடந்த வாரம் ஒரு நாள் இரவு 9 மணியளவில், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த அமைச்சர் தனது மெய் பாதுகாவலர்கள் இன்றி தனியாக வாகனத்தை ஒட்டிக்கொண்டு மகிந்த ராஜபக்சவை சந்திக்க சென்றுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் அதிகளவானவர்கள் இருந்ததால், எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்காது திரும்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கியத் தேசியக் முன்னணியின் இந்த முக்கிய அமைச்சர் அடுத்த தேர்தலுக்கு முன்னர், மேலும் சிலருடன் மகிந்த ராஜபக்ச அணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.