சிங்கப்பூரில் கோத்தபாயவுக்கு மீண்டும் சத்திர சிகிச்சை

Report Print Vethu Vethu in அரசியல்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு மீண்டும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கபூரிலுள்ள பிரபல வைத்தியசாலையான மவுன்டன் எலிசபெத்தில் கோத்தபாய சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த வாரமும் கோத்தபாயவுக்கு இதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் அதில் திருப்தியில்லாத நிலையில் மீண்டும் இன்று சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக கோத்தபாய ராஜபக்ஷ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.