எந்த முடிவும் எடுக்காமல் முடிவடைந்த முஸ்லிம் முன்னாள் அமைச்சர்களின் பேச்சுவார்த்தை

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய பேச்சுவார்த்தை எந்த இணக்கப்பாடுகளும் ஏற்படாமல் முடிவடைந்துள்ளது.

மீண்டும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர். பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான இந்த பேச்சுவார்த்தை சில மணி நேரம் நடந்துள்ளது.

பேச்சுவார்த்தை எந்த முடிவு எடுக்கப்படாமல் முடிவடைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் குறிப்பிட்டுள்ளார்.