ஜே.வி.பியின் பிரேரணைக்கு மஹிந்த அணியினர் ஆதரவு

Report Print Rakesh in அரசியல்

அரசுக்கு எதிராக ஜே.வி.பியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு மஹிந்த அணியான பொது எதிரணி தீர்மானித்துள்ளது.

பொது எதிரணியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் அதன் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று முற்பகல் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றுள்ளது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவியை வழங்கவேண்டாம் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதற்கும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.

அரசுக்கு எதிராக ஜே.வி.பியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது ஜுலை மாதம் 9ஆம், 10ஆம் திகதிகளில் விவாதம் நடைபெற்று, 10ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.