முடிவுக்கு வருகின்றது ரணிலின் அரசியல் வாழ்வு? பந்துல

Report Print Rakesh in அரசியல்

“பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்வு இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருகின்றது. இனிமேலாவது அவர் வீட்டில் நல்லாத் தூங்கட்டும்.”

இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது பிரதமர் பதவியிலிருக்கும் ரணில், நாட்டுக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ எந்த நன்மையையும் செய்யவில்லை.

நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துள்ள ரணில், அந்நாடுகளின் இராணுவத்தினரை இங்கு காலூன்றச் செய்துள்ளார்.

2015ஆம் ஆண்டு தொடக்கம் இந்த நாட்டை அவர் நாசமாக்கிக்கொண்டே வருகின்றார். இதற்கு முஸ்லிம் கட்சியினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் பேராதரவை வழங்கி வருகின்றார்கள்.

எனவே, இப்படிப்பட்ட ரணிலுக்கும், அவருக்கு ஆதரவு வழங்கி வருவோருக்கும் தேர்தலில் நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்" - என்றார்.