யாழில் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்புக்கான நேர்முகத் தேர்வு - ஆளுநர் விஜயம்

Report Print Gokulan Gokulan in அரசியல்

வடமாகாணத்திலிருந்து இளைஞர் யுவதிகளை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு இடம்பெற்றிருந்த நிலையில், அங்கு வடமாகாண ஆளுநர் விஜயம் செய்திருந்தார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கலந்து கொண்டுள்ளார்.

இதன்போது நேர்முகத்தேர்வுக்கு வருகை தந்தவர்களுடன் ஆளுநர் கலந்துரையாடலிலும் ஈடுப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுகள் தென்னிலங்கையிலேயே இடம்பெற்று வந்திருந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக் கொண்டதற்கு அமைவாகவே தற்போது இந்த நேர்முகத் தேர்வுகள் வடமாகாணத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெரிவு செய்யப்படுபவர்களுக்கான ஆரம்ப பயிற்சி முகாமும் வடமாகாணத்திலேயே இடம்பெறவுள்ளது எனவும் வடக்கு ஆளுநர் தெரிவித்துள்ளார்.