கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற விசேட மீளாய்வுக் கூட்டம்

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டம் கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.

இக் கூட்டத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் மாகாண திட்டமிடல் பிரதிச் செயலாளர் என்.தமிழ்ச்செல்வன் திட்டங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே.பரமேஸ்வரன் மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

மாகாண சபையின் அமைச்சுக்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், மத்திய அரசாங்கத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் ஏனைய வேலைத்திட்டங்கள் தொடர்பகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்தோடு இத்திட்டங்கள் தொடர்பில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததோடு, அவற்றின் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளும் வழங்கியுள்ளார்.

இதன்போது, உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், மாகாணத்தின் அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்கள் தலைவர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரதி மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.