ஜனாதிபதியாக கோத்தபாய களமிறங்கினால்...! அமைச்சரவையில் எட்டு ராஜபக்சாக்கள்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டால், அமைச்சரவையில் எட்டு ராஜபக்சாக்கள் இருப்பார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக யார் களமிறக்கப்படுவார்கள் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

ஜனாதிபதி தேர்தலில் வெற்றயீட்ட வேண்டுமாயின் 65 இலட்சம் வாக்குகள் பெற்றுக்கொள்ள வேண்டும். சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து கொண்டால் மட்டுமே இவ்வாறு 65 லட்சம் வாக்குகள் பெற்றுக்கொள்ள முடியும்.

இதன் காரணமாகவே ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவையும் களமிறக்கப்பட வேண்டுமெனகோரிக்கை முன்வைத்தோம்.

கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டால் மஹிந்த பிரதமர், பசில் அமைச்சர், சமல் அமைச்சர், நாமலுக்கும் ஒர் அமைச்சுப் பதவி கட்டாயம் கொடுக்க வேண்டும், ஷசீந்திர ராஜபக்ஷ மற்றும் நிரூபமா ராஜபக்ஷ ஆகியோருக்கும் அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டும்.” அப்படியென்றால் 30 பேரைக் கொண்ட அமைச்சரவையில் எட்டு பேர் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களாக இருப்பர்.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவதனை தவிர்க்க முடியாது என்றார்.

Latest Offers