தெமட்டகொடை குண்டுதாரி ரிசாட்டின் நெருங்கிய உறவினர்?

Report Print Jeslin Jeslin in அரசியல்

பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் ஹசீமின் சித்தப்பாவா நீங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப்பை பார்த்து எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது தெமட்டகொடையில் குண்டை வெடிக்க வைத்து உயிரிழந்தவர் ரிசாட் பதியுதீனின் தாயின், சகோதரனின் மகள் என விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் குறுக்கிட்ட நிலையில் அவரை பார்த்து நீங்கள் சஹ்ரானின் சித்தப்பாவா என விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

தெமட்டகொட குண்டு வெடிப்பில் ரிசாட் பதியுதீனின் தாயாரின் சகோதரனின் மகளே கொல்லப்பட்டதாக விமல் வீரவன்ச தெரிவித்தபோது அதனை அப்துல்லா மஹ்ரூப் எம்.பி மறுத்தார். அத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் அல்லவெனவும் கூறினார்.

இதன்போது விமல் வீரவன்ச, நீங்களா சஹ்ரானின் சித்தப்பாவா? ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் அல்லவென்றால் சஹ்ரான் என்ன இந்துவா அல்லது பௌத்தனா? ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் இல்லையா?

சிரியாவில் கொள்வது முஸ்லிம்கள் இல்லையா? அதனால் நீங்கள்தான் அடிப்படைவாதிகளை பாதுகாப்பவர்கள். அதனால்தான் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக குற்றம் தெரிவிக்கப்படுகின்றது. பெளசி எம்.பிக்கோ ஹக்கீம் எம்.பிக்கோ இந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவதில்லை.

அதனால் இந்த நாட்டில் அடிப்படைவாதம் எந்த இனத்தில் இருந்து வந்தாலும் அதனை நாங்கள் தடுத்து நிறுத்தவேண்டும். அதற்கு தமிழ் முஸ்லிம், சிங்கள மக்கள் இணைந்து போராடவேண்டும். அப்போதுதான் இந்த நாட்டை பாதுகாக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers