பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களில் இருவர் மீண்டும் பதவியேற்பு

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்களில் இரண்டு பேர் சற்று முன்னர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டனர்.

கபீர் ஹாசிம் மற்றும் எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோர், ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த இனவாத ரீதியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன் ஆளுநர்களாக பதவி வகித்த அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீன் ஆகியோரை பதவி விலகுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர், கண்டியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இதனையடுத்து, ஆளுநர்கள் மற்றும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர்.

Latest Offers