நாட்டு மக்களிடம் மன்னிப்புக்கோரினார் அமைச்சர்!

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் தற்போதைய ஜனாதிபதியை ஆட்சிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாக டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழிற்நுட்ப அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு ஒளிப்பரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மக்களின் சிறப்புரிமை அதிகாரத்தை மதிக்காது பிரதமரும், ஜனாதிபதியும் இரண்டு பக்கங்களில் இருக்கின்றனர். சட்டரீதியாக இருந்த அரசாங்கத்தை சட்டவிரோதமான முறையில் சீர்குலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குற்றவாளி. அத்துடன் ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த தாக்குதலுக்கு ஜனாதிபதியே முற்றாக பொறுப்புக் கூற வேண்டும்.

ஜனாதிபதியே நிறைவேற்று அதிகாரம் கொண்டவர், அவரே பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர். இதனால், ஜனாதிபதி பொறுப்புக் கூற வேண்டும். வேறு யாரும் அல்ல எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers