அடுத்தடுத்து இரண்டு சத்திர சிகிச்சைகள்! கோத்தபாய தொடர்பில் நீதிமன்றத்தில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

கோத்தபாயவின் இருதய சிகிச்சைக்கா 6 வாரங்கள் ஓய்வு தேவையென சட்டதரணி நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

விசேட மேல் நீதி மன்றத்தில் கோத்தபாயவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஜூலை மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, சிங்கபூரிலுள்ள பிரபல வைத்தியசாலையான மவுன்டன் எலிசபெத்தில் கோத்தபாய சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த வாரமும் கோத்தபாயவுக்கு இதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் அதில் திருப்தியில்லாத நிலையில் மீண்டும் நேற்று சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், கோத்தபாயவின் இருதய சிகிச்சைக்கா 6 வாரங்கள் ஓய்வு தேவையென சட்டதரணி நீதிமன்றத்தில் கோரியுள்ளமை குறிப்பிடத்தது.

இதேவேளை, கூட்டு எதிர் கட்சி தலைமையில், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக கோத்தபாய ராஜபக்ஷ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers