வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டும்

Report Print Jeslin Jeslin in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியுதீன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

றிசார்ட் பதியுதீன் அவையில் இல்லாத சந்தர்ப்பத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட போது தெமட்டகொடையில் குண்டை வெடிக்க செய்த பயங்ரவாதிகளுக்கு றிசார்ட் பதியுதீன் உறவு முறை கொண்டவர் என விமல் வீரவன்ச கூறியமைக்கு பதிலளித்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தெமட்டகொடையில் குண்டை வெடிக்க செய்தவர்கள் மத்தியில் றிசார்ட் பதியுதீன் அம்மாவின் சகோதரரின் மகளும் இருந்ததாக வீரவன்ச கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள றிசார்ட் பதியுதீன், தனது தாயாருக்கு சகோதரர்கள் இல்லை என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நாடாளுமன்ற சிறப்புரிமையின் பின்னால் மறைந்துக்கொண்டு நாடாளுமன்றத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை வெளியிட்டு, ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இருக்கும் முஸ்லிம் தலைவர்கள் சம்பந்தமாக ஆத்திர உணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

விமல் வீரவன்ச தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் பொய்களை வெளியிட்டு வருகிறார். சஹ்ரான் குழுவினர் தாக்குதல் நடத்திய தினத்தில் இருந்து பொய்யான தகவல்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றி, இனங்களுக்கு இடையில் பகையை ஏற்படுத்தி வருகிறார்.

விமல் வீரவன்ச கூறிய பொய்கள் உண்மையில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகவும் வீரவன்ச தனக்கு எதிராக ஒரு முறைப்பாட்டை கூட பொலிஸில் செய்யவில்லை எனவும் றிசார்ட் பதியுதீன் கூறியுள்ளார். ஊடகங்கள் வாயிலாக வீரவன்ச பொய்களை கூறி வருவதை செய்து வருகிறார்.

தனது தாயாருக்கு சகோதரர்கள் இல்லா நிலையில், சகோதரர் இருக்கின்றார் என்று தொடர்ந்தும் பொய் கூறி வருகிறார். இவ்வாறு பொய்களை கூறும் விமல் வீரவன்சவின் மூளை பரிசோதிக்க நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers