பதவியை கைவிட்டாலும் அணி மாற மாட்டேன்: அமைச்சர் ராஜித உறுதி

Report Print Steephen Steephen in அரசியல்

பதவியை கைவிட்டாலும் அணியை விட்டு விலக போவதில்லை என சுகாதாரம், போஷாக்கு மற்றும் தேசிய வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பேருவளை தர்கா நகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

நான் சுகாதார அமைச்சராக பதவி வகிக்கும் வரை சீனாவில் இருந்து சிகரட் இறக்குமதி செய்ய இடமளிக்க மாட்டேன்.

அதேவேளை நான் தற்போதுள்ள அணியின் ஊடாக எதிர்வரும் தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவேன். அந்த தேர்தலில் வெற்றி பெற்று என் மீது குற்றம் சுமத்தும் நபர்களுக்கு சிறந்த பாடத்தை கற்றுக்கொடுப்பேன் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers