ஏன் அவசர காலச்சட்டம் இன்னமும் நீக்கப்படவில்லை?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தி அவசரகால சட்டத்தை அரசாங்கம் உடனடியாக நீக்க வேண்டும். அவசர தேவைகளுக்காக பயன்படுத்த வேண்டிய சட்டங்களை அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்த இடமளிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது பேசிய அவர்,

தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தியதாக குறிப்பிடும் அரசாங்கம் அவசரகால சட்டத்தை ஏன் இன்னும் நீக்கவில்லை. அத்துடன் அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ளமையினால் அரசாங்கத்திற்கு எதிராக தொழிற்சங்கத்தினர் போராட்டங்களை முன்னெடுக்கவும், பொது மக்கள் பொது இடங்களில் ஒரு தேசிய தினம் தொடர்பில் கூட்டங்களை கூட்டவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமைகள் அரசாங்கத்திற்கு சாதகமாக காணப்படுகின்றது. ஆகவே தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தி அவசரகால சட்டத்தை அரசாங்கம் உடனடியாக நீக்க வேண்டும். அவசர தேவைகளுக்காக பயன்படுத்த வேண்டிய சட்டங்களை அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்த இடமளிக்க முடியாது.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு பிரதானிகளையும், புலனாய்வு பிரிவினரையும் பிரத்தியேகமான முறையில் அழைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு கிடையாது. பதவிக்கு அப்பாற்பட்ட செயற்பாடுகளையே அனைவரும் செயற்படுத்துகின்றார். இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் கருத்துரைப்போம் என்றார்.