பௌத்தம் தாலிபான் மயமாக்கப்படுவதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் - மங்கள சமரவீர

Report Print Steephen Steephen in அரசியல்

பௌத்த தர்மத்தை தாலிபான் மயமாக்கப்படுவதற்கு எதிராக உண்மையான பௌத்தர்கள் ஒன்றிணைய வேண்டும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய மாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரர் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள குறிப்பில் மங்கள இதனை குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த மதம் என்பது அனைத்து நபர்களுக்கும் அன்பு மற்றும் அமைதியை போதிக்கும் உன்னதமான தர்மம் எனவும் எந்த பௌத்தனும் மற்றுமொரு நபரை கல்லெறிந்து கொள்ளுமாறு கூற முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Latest Offers