மக்களுக்கு ஒதுக்கிய நிதியை கடந்த ஆட்சியாளர்கள் தமக்கிடையில் பகிர்ந்துக்கொண்டனர்: திலிப் வெத ஆராச்சி குற்றச்சாட்டு

Report Print Steephen Steephen in அரசியல்

அப்பாவி மக்களுக்காக கடந்த காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதிகளை கடந்த அரசாங்கத்தில் இருந்தவர்கள் தமக்கிடையில் பகிர்ந்துகொண்டனரே தவிர, கிடைக்க வேண்டியவர்களுக்கு உதவிகளை வழங்கவில்லை என மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார்.

தங்காலை பிரதேச செயலகத்தில் நேற்று மீனவர்களுக்கு வீடமைப்பு உதவிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளாக மக்களுக்கு ஒதுக்கப்பட்ட உதவிகளை இவர்கள் தமக்கிடையே பகிர்ந்துகொண்டனர். மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இந்த நிலைமை மாறியது.

எந்த பேதமும் இன்றி நிவாரணம் கிடைக்க வேண்டியவர்களுக்கு சரியான முறையில் நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டது எனவும் திலிப் வெத ஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers