எல்லா கட்சிகளுக்குள்ளும் ஒருசில குழப்பவாதிகள் உள்ளார்கள்: செல்வம் எம்.பி

Report Print Thileepan Thileepan in அரசியல்

எல்லா கட்சிகளுக்குள்ளும் ஒரு சிலர் குழப்பவாதிகளாக இருப்பார்கள். அதைவிடுத்து எமது மக்களின் விடுதலையை வென்றெடுப்பதற்காக அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு இன்று பதில் அளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமக்குள் ஒற்றுமை இல்லையெனில், சிங்கள பெரும்பான்மை கட்சிகள் எமது பிரதேசத்தில் வலுவாக கால் ஊன்றுவதற்கான செயற்பாட்டை நாங்கள் செய்திருக்கின்றோம் என்றே எண்ண வேண்டும்.

தற்போது இருக்கின்ற நிலையில் தமிழ் தரப்புக்கள் ஒற்றுமையாக செயற்பாடாது விடின் வடக்கு, கிழக்கு சிங்கள பெரும்பான்மை கட்சிகளிடம் கைமாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தீவிரவாத தாக்குதல் மற்றும் புத்த பிக்குகளின் செயற்பாட்டால் எங்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவடைந்துள்ளன. எங்களுடைய வரலாறுகள், அதற்கான விலைகள் பலவற்றை நாம் கொடுத்துள்ளோம்.

அந்தவகையில், மக்களுக்காக செயற்படுகின்றோம் என்று கூறுகின்ற அத்தனை கட்சிகளும் ஒற்றுமை என்ற விடயத்தை மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒற்றுமை ஏற்படாத நிலையில் எங்களுடைய தேசிய பிரச்சனை, எங்களுடைய இனப் பரம்பல், எங்களுடைய வரலாறு எல்லாம் அழிகின்ற ஒரு அபாயத்தை நோக்கிச் செல்லும். கௌரவ ஹக்கீம் அவர்களின் கட்சியில் இருந்து தான் கௌரவ றிசாட் அவர்கள் சென்றார்.

இரு கட்சிகளாக அவர்கள் பிரிந்து செயற்பட்டார்கள். தற்போது ஒற்றுமையாக மாறியிருக்கிறார்கள். இது முஸ்லிம் சமூகம் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

எமது தமிழ் சமூகமும் ஒற்றுமை பட வேண்டும். இப்பொழுதும் மாறி மாறி சேறுகளை பூசுகின்ற, எங்களுக்குள் முரண்பாடான கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கின்ற நிலை காணப்படுகின்றது.

சரி, பிழை என்பது வேறு. எல்லா கட்சிகளுக்குள்ளும் ஒரு சிலர் குழப்பவாதிகளாக இருப்பார்கள். அதைவிடுத்து எமது மக்களின் விடுதலையை வென்றெடுப்பதற்காக ஒன்று பட வேண்டும்.

ஒற்றுமைப்படுகின்ற காலகட்டம் தற்போது இருக்கிறது. ஆகவே ஒற்றுமைப்பட வேண்டும். அப்படி செய்யவில்லை எனில் நாம் மக்களின் குரல்களாக இருக்கின்றோம் என்று கூறிக் கொண்டு ஏமாற்றுகின்றோம் என்பது தான் உண்மை என்றார்.

Latest Offers