தேர்தல் நேரத்தில் இரா.சம்பந்தன் வழங்கிய வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை!

Report Print Kalaiyarasi Kalaiyarasi in அரசியல்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வக்கற்ற வங்குரோத்து அரசியல் செய்த ஐக்கியத் தேசியக் கட்சிக்கு முட்டுக்கொடுக்கும் கூட்டமைப்பிற்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது இயலாதகாரியமா? என கிழக்கு தமிழர் ஒன்றியம் கேள்வியெழுப்பியுள்ளது.

கல்முனை நகரில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வெறுமனே பத்திரிக்கை அறிக்கையும், நாடாளுமன்ற உரையையுமே பேசிக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலத்தை கடத்துகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கடந்த தேர்தல் காலத்தில் கல்முனை பிரதேசத்தில் தேர்தல் பரபரப்பு வேளையில் ஒருவாரத்திற்குள் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதாக வாக்குறுதியளித்தார். ஆனால் இன்றுவரை நிறைவேற்றி வைக்கவில்லை.

நல்லிணக்கம் பற்றி பேசும் கூட்டமைப்பு கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயத்தி காட்டாத நல்லிணக்கமா இனியும் வெளிப்படுத்த போகின்றது.

முஸ்லிம் அரசியல் தலைமைகள் தங்களது இனத்திற்கு இன்னல் ஏற்பட போகின்றது என அறிந்து தமது பதவிகளை துச்சமென எண்ணி கட்சி பேதங்களை கடந்து செயற்பட்டனர்.

அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிகளை துறந்து இந்த போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பார்களாயின் தமிழ் மக்கள் அளித்த வாக்கிற்கு நன்றியுள்ளதாக இருப்பார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுக்கு முட்டுக்கொடுக்கும் வேலையை தவிர்த்து கல்முனை மக்களோடு இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு பிரதேச செயலகம் வெற்றிபெற துணை நிற்க வேண்டும்.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளை இந்தியாவில் போய் மருத்துவ அறிக்கையை வெளியிட்டது போல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலத்தை கடத்தக்கூடாது என வலியுறுத்தினர்.

நாங்கள் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்ளும் மதத்தலைவர்கள், கல்முனை அரசியல் தலைகளுடன் பக்கபலமாக கைகோர்ப்போம் என வலியுறுத்தியுள்ளனர்.

Latest Offers