நாட்டை மீண்டும் ஜொலிக்கச் செய்ய கோத்தாவுடன் மக்கள் இணைய வேண்டும்!

Report Print Kamel Kamel in அரசியல்

நாட்டை மீண்டும் ஜொலித்து மிளிரச் செய்வதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுடன், மக்கள் இணைந்து கொள்ள வேண்டுமென முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு அபயாராமயவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மலர்மொட்டு தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவேயாவார் என குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் பொறுப்புடன் இந்த விடயத்தை தாம் தெரிவிப்பதாகவும், மஹிந்த ராஜபக்சவின் பிரதிநிதியாக கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் களமிறங்குகின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விரைவில் அதிகாரபூர்வ அறிவித்தலை வெளியிடுவார் என முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

Latest Offers