சிங்கள பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது: உதய கம்மன்பில

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த 2012ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின் படி சிங்கள மக்களுக்கு இணையாக சிங்கள பிள்ளைகளின் எண்ணிக்கை 4 வீதம் குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தில் பெற்றுக்கொண்ட தகவலையே நான் கூறுகிறேன்.

2012ம் ஆண்டு இலங்கையில் சிங்களவர்களின் எண்ணிக்கை 75 வீதம், இலங்கை தமிழர்கள் 9 வீதம், இந்திய தமிழர்கள் 4 வீதம்,முஸ்லிம்கள் 11 வீதம்.

அந்த வருடத்தில் 14 வயதுக்கும் குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை 71 வீதம். இதில் சிங்கள பிள்ளைகளின் எண்ணிக்கை 12 வீதம்.

இலங்கை தமிழ் பிள்ளைகளின் எண்ணிக்கை 5 வீதம், இந்திய தமிழர்கள் மற்றும் முஸ்லிம் பிள்ளைகளின் எண்ணிக்கை 12 வீதம்.

சிங்கள மக்களின் எண்ணிக்கைக்கு இணையாக சிங்கள பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. முஸ்லிம் மக்களின் எண்ணிக்கைக்கு இணையாக பிள்ளைகளின் எண்ணிக்கை 33 வீதமாக அதிகரித்துள்ளது. 9 வீதத்தில் இருந்து 12 வீதமாக அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில் சிங்கள இனம் என்பது படிப்படியாக அருகி வரும் இனமாக மாறியுள்ளது 2012 எடுக்கப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின் மூலம் தெளிவாகியுள்ளது எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.


Latest Offers