மூன்று, குண்டு துளைக்காத வாகனங்களைப் பயன்படுத்தும் மஹிந்த!

Report Print Kamel Kamel in அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கு ஏற்கனவே 3 குண்டு துளைக்காத வாகனங்கள் உண்டு, இந்த நிலையிலேயே மேலும் ஓர் குண்டு துளைக்காத வாகனம் கொள்வனவு செய்ய முயற்சிக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவருக்கு குண்டு துளைக்காத வாகனம் கொள்வனவு செய்தல் உள்ளிட்ட சில காரணிகளுக்காக நாடாளுமன்றில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்புப் பிரேரணை பின்னர் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போது, எதிர்க்கட்சித்தலைவருக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.

எவ்வாறெனினும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கு மொத்தமாக மூன்று குண்டு துளைக்காத வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஒரு வாகனத்தின் பெறுமதி சுமார் இரண்டாயிரத்து ஐநூறு லட்சம் ரூபா எனத் தெரியவருகின்றது.

உலகில் அதிகளவில் குண்டு துளைக்காத வாகனங்களைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவராக மஹிந்த திகழ்கின்றார் என தெற்கு இணைய தளமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கத்தினால் எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கியுள்ள வாகன விபரங்கள் வருமாறு.

A 232832 (Bulletproof) (Benz - S Class)

A 233246(Bulletproof) (Benz - S Class)

CAD-0223 (Bulletproof) (Benz - S Class)

A 233364 Dmy (Benz - S Class)

KX-2389 Defender

KX-2431 Defender

KX-5292 Land Cruiser

PF-7307 Cab

Latest Offers