வவுனியா மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த ஆளுநர்

Report Print Thileepan Thileepan in அரசியல்

வவுனியா மாவட்ட நகர மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களுக்கும் ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாவட்டத்திலுள்ள நகர மற்றும் பிரதேச சபைகளின் தற்போதைய நிலைமைகள், அவற்றினூடாக முன்னெடுத்துள்ள மக்கள் நல செயற்பாடுகள் மற்றும் அவற்றை மேற்கொள்ளும் போது முகம்கொடுக்கும் சவால்கள், பிரச்சினைகள் குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், உதவி உள்ளூராட்சி ஆணையாளர், வவுனியா மாவட்ட நகர மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

.

Latest Offers