விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது தமிழர்களது செயற்பாட்டை முடக்குகின்றது! பிரதமர் வி.உருத்திரகுமாரன்

Report Print TGTE Canada Media in அரசியல்

தமிழீழ விடுதலைப் புலிகளை மீதான பிரித்தானியாவின் தடை என்பது, தமிழர்கள் அனைவரினதும் அரசியல் செயற்பாடுகளையும் அடக்கி ஒடுக்குவதே என்றும், இந்த நடைமுறைக்கே இலங்கை அரசாங்கம் ஊக்கமளிக்கிறது என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் , விடுதலைப் புலிகள் மீதான அமெரிக்காவின் தடைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தியவர் என்பதோடு, விடுதலைப் புலிகளின் சர்வதேச சட்ட ஆலோசகராக இருந்தவர்.

தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானாவின் தடைக்கு எதிராக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் தமிழர்கள் முன்னெடுத்துள்ள சட்ட நடவடிக்கை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசை அமைப்பதே தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் இலக்காக இருந்தது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் இலக்கும் இதுவாகவே இருக்கின்றது.

பிரித்தானியாவின் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையினால், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் செயல்முனைப்பில் பொதுமக்கள் பங்கேற்பதில் அச்சம் கலந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் பணியைப் பெருதும் பாதிக்கின்றது.

விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது ஜனநாயகரீதியாக செயற்படுகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பெரும் தடையாக இருப்பதோடு, ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் விருப்பினை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கும் அது இடைஞ்சலாகவுள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது சட்டவாதத்தில் வாதிட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடதக்கது.

Latest Offers