எனது இலக்கு இதுதான்! அமைச்சர் சஜித் பிரேமதாச

Report Print Murali Murali in அரசியல்

2020ம் ஆண்டில் அனைத்து தரப்பினர்களுக்கு நிழலினை பெற்றுக் கொடுப்போம் என வீடமைப்பு நிர்மாணத் துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

திஸ்ஸமகாராம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

எமது நாட்டில் இன்று 25 இலட்சம் பேர் வீடில்லாப் பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றனர். 2020ம் ஆண்டாகும் போது நாடுபூராவும் இவ்வாறான 20,000 வீடமைப்பு கிராமங்களை நிர்மாணித்து வழங்கவுள்ளோம்.

விசேடமாக 2500வது கிராமத்தினை ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிப்போம். இதுவரை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 295 வீடமைப்பு கிராமங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனை 500 ஆக்குவதே எனது இலக்காகும்.

எனது தந்தையின் காலத்தில் உதாகம திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட சதுன்கம கிராமத்திற்கு அருகாமையில் 22 வீடுகளைக் கொண்டு இந்தகிராமத்தை நிர்மாணித்துள்ளேன்.

இந்த பிரதேசம் எவ்விதமுன்னேற்றமும் இல்லாமல் இருந்த காலத்தில்தான் எனது தந்தை அன்று இந்தக் கிராமத்தினை ஆரம்பித்தார்.

கிராமங்களுக்கு தூய குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்காக எனது அமைச்சிலிருந்து 420 இலட்சம் ரூபாவினை ஒதுக்கியுள்ளேன்.

இந்த முழு பிரதேசத்திற்கும் இன்னும் குறுகிய காலத்தில் தூய நீர்ப்பாசன திட்டமொன்றினை ஆரம்பித்துவைக்கவுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.