ஜனாதிபதி அறியாதிருக்கும் விடயத்தை சுட்டிக்காட்டும் ஐக்கிய தேசியக் கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

18ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் நீக்கப்பட்டுள்ளதை ஜனாதிபதி அறியாதிருப்பதாகவும், இதன் காரணமாக அந்த திருத்த சட்டத்தில் உள்ள சில பந்திகளை நீக்குமாறு அவர் கூறுவதாகவும் ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவின் நாவலப்பிட்டி பிரதேச உறுப்பினர்களுடனான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பில் செய்த மாற்றங்களை அறியாதிருக்கின்றார்.

18ஆவது அரசியலமைப்பு சட்டத்தை இரத்து செய்யவே 19ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே வலுவான பின்னணியை கட்டியெழுப்பியுள்ளது.

பல ஆண்டுகளாக அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக இருந்த நாட்டின் 50 சத வீதமான மக்கள் தற்போது சுயாதீனமாக மாறியுள்ளனர்.

நாட்டு வறிய மக்களின் துயரங்களை அறிந்து நாட்டை நல்ல வழிக்கு கொண்டு செல்ல கூடிய தலைவருக்கு இந்த மக்கள் ஆதரவளிக்க எதிர்பார்த்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers