ஜனாதிபதி தனது இயலாமையை மூடி மறைக்க முயற்சி

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனது தனது இயலாமையை மூடி மறைத்துக் கொள்ள முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ஜனாதிபதியின் இயலமையைத் தவிர அரசியல் அமைப்போ அல்லது 19ம் திருத்தச் சட்டத்தின் குறைபாடுகளோ கிடையாது என கட்சியின் பிரதித் தலைவர் ரீ.எம். அன்வர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்ரோபர் மாதம் ஜனநாயகத்திற்கு விரோதமாக இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சித் திட்டத்தை 19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாகவே தோற்கடித்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

18ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரத்திற்கு அதீத அதிகாரங்கள் வழங்கப்பட்டதாகவும் அதனை ரத்து செய்தே, 19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக எந்தவொரு நேரத்திலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குரல் கொடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Latest Offers