குற்றவாளிகளை பாதுகாக்கும் புலனாய்வு பிரிவு! வீரவன்ச குற்றச்சாட்டு

Report Print Kamel Kamel in அரசியல்

புலனாய்வுப் பிரிவினர் குற்றவாளிகளை பாதுகாக்கின்றனர் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

குருணாகல் மருத்துவர் சஹாப்டீன் சாபியை விடுதலை செய்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முயற்சித்து வருகின்றனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் சில அதிகாரிகள் இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு குற்றவாளிகளை பாதுகாக்கும் ஒர் மத்திய நிலையமாக மாறியுள்ளது. நான் கூறுவது பொய்யென்றால் அதனை நிரூபிக்க வேண்டும்.

அஸ்கிரி பீடாதிபதி இனவாதத்தை தூண்டுவதாக அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டாளர் பாக்கியசோதி சரவணமுத்து முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும், சிவாஜிலிங்கம், விக்னேஸ்வரன் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்கள் ஏனைய மதங்கள் மீது குரோத உணர்வைத் தூண்டி பேசும் போது யாரும் அது பற்றி குரல் கொடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers