பலத்த பாதுகாப்புடன் ரணில் மட்டக்களப்பிற்கு திடீர் விஜயம்

Report Print Sujitha Sri in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்றைய தினம் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது அவர், உயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கும் சென்றுள்ளார்.

இந்த விஜயத்தில் பிரதமருடன், தேவாலய போதகர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்தவர்களும் பங்கு கொண்ட நிலையில் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது.