கோத்தபாயவிற்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள்! மகிந்த கடும் அதிருப்தி

Report Print Murali Murali in அரசியல்

கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை புலம் பெயர் தமிழர்களின திட்டமிட்ட சதிச் செயல் என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயம் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு எவ்விதத்திலும் தடையாக இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“சஜித் பிரேமதாச வேட்பாளராகக் களமிறங்குவதை ஐக்கிய தேசியக் கட்சி விரும்பினாலும் அவர் ஜனாதிபதியாவதை மக்கள் விரும்பவில்லை. நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதற்கு சில முக்கிய தகுதிகள் இருக்கவேண்டும்.

ஆகையினால், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டால் அதில் தமக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது.

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொது ஜனபெரமுனவில் இருந்தே வேட்பாளர் நியமிக்கப்படுவார்” என அவர் மேலும் கூறியுள்ளார்.