ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் தெரிவுக்குழுவின் நேர்மையில் பிரச்சினை

Report Print Steephen Steephen in அரசியல்

உயிரித்த ஞாயிறு தினம் நடந்த தாக்குதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நேர்மை தொடர்பாக பிரச்சினை இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தற்கொலை தாக்குதல் நடத்திய இரண்டு பயங்கரவாதிகளில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்டிருந்த இப்ராஹிம் என்பவரின் இரண்டு மகன்மாரும் அடங்குவர்.

சாதாரணமாக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவர் பெட்டி கடையை நடத்தினாலும் அதனை நடத்தும் உறுப்பினரிடம் நிதியுதவியை பெறும் கட்சி. இதனால், தமது தேசிய பட்டியலில் இடம்பெற்றிருந்த இப்ராஹிம் என்ற செல்வந்தரிடம் பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இப்ராஹிமின் பணத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது எந்தளவுக்கு நியாயமானது.

அத்துடன் பயங்கரவாதி சஹ்ரான் 2015ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் உடன்படிக்கையை செய்தவர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கின்றார். விசாரணைகளுக்கு அழுத்தங்கள் ஏற்படலாம் என்பதால் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக ஹக்கீம் கூறியிருந்தார்.

அப்படி கூறியவர் எப்பது இந்த தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.

சஹ்ரான் 2015ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக பாடுபட்டவர் என்ற தெரியவந்துள்ள நிலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படி விசாரணை நடத்த முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.

றிசார்ட் பதியூதீனுடன் பேசிக்கொண்ட விதத்தில் கேள்விகளும் பதில்களும் ஊடகங்களுக்கு எதிரில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது மட்டுமே நடந்துள்ளது.

இதனால், இந்த விசாரணைகள் நீதியான, நேர்மையான விசாரணை என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

படையினர், இரண்டு வருடங்களாக எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவர் ஷாபியை ஒரு மாதத்தில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அப்படி நடந்தால், அது குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸாரின் நடத்தை சம்பந்தமாக பிரச்சினைகளை ஏற்படுத்தும் புதிய அரசாங்கத்தின் கீழ் இது சம்பந்தமாக நியாயமான விசாரணை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் மொஹமட் முஸ்ஸமில் குறிப்பிட்டுள்ளார்.