அரசாங்கத்திற்கு எதிரான ஜேவிபி போராட்டம் ஜூலையில்

Report Print Ajith Ajith in அரசியல்

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை ஜேவிபி ஜூலை மாதத்தில் தீவிரப்படுத்துகிறது.

இதன்படி அரசாங்கத்துக்கு எதிரான ஜேவிபியின் நம்பிக்கையில்லா பிரேரணை ஜூலை 10, 11ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் விவாதத்துக்கு வருகிறது.

அதேநேரம் 'அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்' என்ற மக்கள் பேரணி ஜூலை 7, 8ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த பேரணி, 7ஆம் திகதி களுத்துறையில் ஆரம்பித்து மொரட்டுவையில் முடிவடைகிறது.

பின்னர் 8ஆம் திகதி மொரட்டுவையில் ஆரம்பித்து நுகெகொடையை வந்தடையவுள்ளது. அங்கு பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

Latest Offers