ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு மஹிந்த தரப்பு கண்டனம்

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மக்களுக்கு ஆணை வழங்கி ஆட்சி பொறுப்பினை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ள நீதிமன்றின் உதவியை நாடியுள்ளமை விழுமியங்களுக்கு முரணானது என சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு தாமரை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பத்திரன இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக் காலம் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி தொடங்குகின்றதா அல்லது 19ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட 2015ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி தொடங்குகின்றதா என்பது குறித்து ஜனாதிபதி அடுத்த வாரம் நீதிமன்றில் சட்ட விளக்கம் கோர உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு முன்னரும் ஜனாதிபதி இவ்வாறு தனது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பத்திரன குற்றம் சுமத்தியுள்ளார்.