தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தில் 20 ரூபாவை உயர்த்தியவர்கள் இன்று...

Report Print Sinan in அரசியல்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தில் 20 ரூபாவைக் உயர்த்திவிட்டு தம்பட்டம் அடித்து திரிந்தவர்கள், இன்று 50 ரூபா பற்றி பேசுகிறார்கள் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

தோட்டத் தொழிலாளர்களிற்கு சம்பளத்தில் 20 ரூபாவை உயர்த்திவிட்டு காட்டி கொடுத்த குழுவினர் இன்று பெரிய பேச்சுக்களை கதைக்கின்றனர்.

ஓரளவில் இந்த அரசாங்கத்திற்கு என்னென்ன கூறினமோ அவை அனைத்தையும் மக்களிற்கு செய்து கொடுத்துள்ளோம்.

அமைச்சர் நவின் திசாநாயக்க எல்லோர் முன்னிலையிலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் சம்பளம் உயர்த்தப் போவதாக கூறினார். ஆனால் இப்போது அதை கொடுக்க முடியாது என்கிறார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.