இலங்கையில் இன மத அடிப்படையிலான பள்ளிக் கூடங்கள் கூடாது! லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தல்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமை கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும், இன அல்லது மத ரீதியாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

அனைத்து இன மக்களிலும் நூற்றுக்கு 99 வீதமானோர் அடிப்படைவாதத்துக்கு எதிரானவர்கள். கல்வியினால் மாத்திரம் வாழ்க்கையை வெற்றிகொள்ள முடியாது, வௌிக்கள செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டும்.

அனைத்து இனங்களையும் சேர்ந்த மாணவர்கள் ஒன்றாக இருக்கக்கூடிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு அதனூடாக சகவாழ்வை மேம்படுத்த வேண்டும்.

எவ்வாறாயினும் இன அல்லது மத ரீதியாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றார்.