மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரனுக்காக குவிந்த மகிந்த ரணில் உட்பட முக்கிய அரசியல் புள்ளிகள்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

மூத்த ஊடகவிலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனின் 60வது பிறந்த நாளில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

அகவை 60ஐ பூர்த்தி செய்யும் மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரனின் பிறந்த நாள் நிகழ்வினை ஊடக நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது.

அவரின் பிறந்த தினத்தின் போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கெடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், அமைச்சர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, சட்டத்தரணி தவராசா, முன்னாள் வட மாகாண சபையின் எதிர் கட்சி தலைவர் தவராசா உட்பட அதிகளவான அரசியல் பிரமுகர்கள், இலக்கிய ஆளுமைகள், ஊடகவியலாளர்கள் எழுத்தாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.