இன்னும் மூன்று வாரங்களில் நற்செய்தி! ஜனாதிபதி தேர்தல் குறித்து அமைச்சர் மனோ

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி தேர்தல் குறித்து இன்னும் மூன்று வாரங்களில் நாட்டு மக்களுக்கு நல்ல செய்தி ஒன்று அறிவிக்கப்படும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,

“புதிய எதிர்பார்ப்புகளுடன் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த கால அரசர்கள், இளவரசர்களை எதிர்வரும் காலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர இடமளிக்கப் போவதில்லை.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் குறித்து இன்னும் மூன்று வாரங்களில் ஐக்கிய தேசிய முன்னணியினால் நாட்டு மக்களுக்கு நல்ல செய்தி ஒன்று அறிவிக்கப்படும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers