பதவிக் காலம் தொடர்பில் ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Report Print Ajith Ajith in அரசியல்

பதவிக் காலம் நிறைவடையும் காலம் தொடர்பிலான விளக்கத்தினை கோரி அடுத்த வாரம் ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்யவுள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக் காலம் 09.01.2015 ஆரம்பமானது எனினும் அவர் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை 19.05.2015 அன்று பொறுப்பேற்றுள்ளார்.

இதனடிப்படையில் இந்த வருடம் அவருடைய பதவிகாலம் முடிவடைகின்றதா அல்லது அடுத்த வருடம் பதவி காலம் முடிவடைகின்றதா என்ற விளக்கதினை கோரியே இந்த மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.