இலங்கை வல்லரசுகளின் அடிமையாக மாறும்! ஆரூடம் வெளியிட்டார் மகிந்த அணியின் முக்கியஸ்தர்

Report Print Steephen Steephen in அரசியல்

மில்லேனியம் சேலேஞ் கோப்பரேஷன் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் இலங்கை அமெரிக்கா உட்பட வல்லரசு நாடுகளின் அடிமை நாடாக மாறுவதை தவிர்க்க முடியாது என சிரேஷ்ட ஊடகவியலாளரும் மகிந்த ராஜபக்ச அணியை சேர்ந்தவருமான மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மில்லேனியம் சேலேஞ் கோப்பரேஷன் என்ற நிகழ்ச்சித் திட்டம், நீண்டகால செயற்பாட்டின் ஒரு அங்கம். இந்த முழு செயற்பாடுகளின் பிரதிபலனாக இலங்கை அமெரிக்கா தலைமையிலான உலக வல்லரசுகளின் அடிமை நாடாக மாறும்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் நாட்டின் ஆட்சியாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார். அவர் மேற்குலக நாடுகளின் பொருளாதார முறைமையை பக்தியுடன் தழுவியவர்.

அத்துடன் ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டதை நியாயப்படுத்திய மூன்றாம் உலக நாடுகளின் ஒரே தலைவர் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க எனவும் மொஹான் சமரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.