அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட செல்வந்த நாடுகளிலும் மரண தண்டனை! மகிந்த

Report Print Sujitha Sri in அரசியல்

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் ஜீ.எஸ்.பி சலுகை நிறுத்தப்படும் என பொய் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,

உயர் நீதிமன்றில் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

என்ற போதிலும் ஜனாதிபதி தான் எடுத்த முடிவில் உறுதியாக உள்ளார். வழக்கு விசாரணைகள் முடிந்த உடனே மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்.

உலகில் 44 நாடுகளில் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட செல்வந்த நாடுகளிலும் மரண தண்டனை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.