கம்பெரலிய வேலைத்திட்டத்தினூடாக 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

Report Print Theesan in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கமைய நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் கம்பெரலிய துரித அபிவிருத்தி வேலைத்திட்டத்தினூடாக 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்று கொண்டிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஜ.எம். ஹனீபா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

இத்திட்டத்தின் மூலம் வீதி அபிவிருத்தி, சிறிய பாலம் அமைத்தல், மின்சார விநியோகமற்ற வீடுகளுக்கு மின்சாரம் வழங்கல், மதத் தலங்கள் புனரமைத்தல், விளையாட்டு மைதானங்கள் புனரமைத்தல், சிறுவர் பூங்காக்கள் அமைத்தல், நீர்விநியோகம் வடிகாலமைப்பும், கூரை வசதிகள் பாடசாலைகளுக்கு மலசல கூட வசதிகள் அமைத்தல் போன்ற செயற்றிட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த அடிப்படையில் வவுனியா மாவட்டத்திற்கு மொத்தமாகக் கிடைத்த வேலைத்திட்டங்களில் 682 வேலைத்திட்டத்திற்குரிய 311.65 மில்லியன் ரூபாய்கள் வவுனியா மாவட்டத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தில் அதிகளவான 331 வேலைத்திட்டங்கள் இன்று வரையிலும் முடிவடைந்திருக்கின்றது. அரைவாசிக்குரிய நிதிகள் செலவீடுகள் செய்யப்பட்டு முடிவடைந்துவிட்டது.

இதேபோன்று இந்த அமைச்சினூடாக 1000 வீடுகள் வழங்கப்பட்டு முதற்கட்டமாக 450 வீடுகளும், இரண்டாம் கட்டமாக 550 வீடுகளும் வவுனியா மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அதேபோன்று கிராமிய அபிவிருத்தித்திட்டம் உட்கட்டமைப்புக் கிராமிய அபிவிருத்தித்திட்டம் அடிப்படையில் 32 மில்லியன் மேலதிகமான ஒதுக்கப்பட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த அமைச்சினுடாக எதிர்வரும் காலங்களில் அனைத்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என அரசாங்க அதிபர் கூறியுள்ளார்.

Latest Offers