மைத்திரி உத்தரவிட்டாலும் மரண தண்டனை நிறைவேற்றப்படாது

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டாலும் குறிப்பிட்ட காலம் வரையில் மரண தண்டனை நிறைவேற்றப்படாது என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றில் சற்று முன்னர் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 17ம் திகதி வரையில் மரண தண்டனை நிறைவேற்றப்படாது என அவர் நீதிமன்றில் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியினால் மரண தண்டனை நிறைவேற்றுவதாக விடுக்கப்பட்ட அறிவிப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இன்றைய விசாரணைகளின் போது சிறைச்சாலை ஆணையாளர் நயாகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மரண தண்டனை நிறைவேற்றப்படும் திகதி, இடம் மற்றும் நபர்கள் பற்றிய விபரங்களை இதுவரையில் ஜனாதிபதி வழங்கவில்லை என சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


you may like this video