தமிழ் மக்களை கொச்சைப்படுத்தும் ஜனாதிபதியின் செயல்! அமைச்சரின் குற்றச்சாட்டு

Report Print Thirumal Thirumal in அரசியல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்தானது தமிழ் சமூகத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும் என அமைச்சர் இராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஹங்குராங்கெத்த - எலமுல்ல, கபரகல தமிழ் வித்தியாலயத்திற்கான வகுப்பறை கட்டட தொகுதி இன்று அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த வியடத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

போதைப்பொருட்களை ஒழித்துக்கட்டுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். இதற்கு நாமும் முழு ஆதரவையும் வழங்க தயாராகவே இருக்கின்றோம்.

ஆனால் அவர் கடந்த வாரம் வெளியிட்ட கருத்து தான் எமக்கு மனக்கவலையை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனையும், போதைப்பொருள் வர்த்தகத்தையும் தொடர்புபடுத்தி குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து அல்ல. தமிழ் மக்களை கொச்சைப்படுத்தும் செயலாகவே பார்க்கின்றோம். போதையை ஒழிக்கவேண்டும் என்ற ஜனாதிபதியின் கொள்கை சரியானது.

ஆனால், அதனை மையப்படுத்தி தமிழ் மக்களின் மனங்களை புன்படுத்தும் விதத்தில் கருத்து வெளியிடக்கூடாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers