ஐ.தே.கட்சி தேர்தலுக்கு தயார்: அமைச்சர் ராஜித

Report Print Steephen Steephen in அரசியல்

வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்கள் சமூகத்தில் பேசப்பட்டு வரும் நபர்களில் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் நிறுத்தப்படுவார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கமும் ஐக்கிய தேசியக்கட்சியும் எந்த தேர்தலை எதிர்கொள்ளவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கண்டியில் நேற்று மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்து ஆசிய பெற்ற பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசியல் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. எனக்கு எதிராக தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டு பத்திரம் ஒன்றை மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களிடம் கையளித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், அரசியல்வாதிகள் பின்னால் செல்லும் சங்கமாக மாறியுள்ளது. நானும் 14 ஆண்டுகள் சுகாதார துறை தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும் அரசியல்வாதிகளின் பின்னால் சென்றதில்லை. நாங்கள் அரசியல்வாதிகளுடன் நட்புறவாக பணியாற்றி தொழிற்சங்க செயற்பாடுகளில் ஈடுபட்டோம்.

எனினும் தற்போதைய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், அரசியல் சங்கமாக பயங்கரவாதமாக செயற்பட்டு வருகிறது. இதன் மூலம் அப்பாவி நோயாளிகளே பாதிக்கப்படுவார்கள். அரச மருத்துவர்களின் சம்பளம் 10 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சர் என்ற வகையில், நான் மேலும் 10 ஆயிரம் ரூபாய் அதிகரித்தேன். கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் சகல சிறப்புரிமைகளை பெற்றுக்கொண்டு, புகழ்பெற்ற சங்கத்தையும் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த சங்கத்தினர் தற்போது தொழில் ரீதியான கோரிக்கைகளை முன்வைப்பதில்லை. அந்த சங்கத்தின் பிரதிச் செயலாளர் மருத்துவர் கவிந்த டி சொய்சா, விகாரதிபதி ஒருவரை பகிரங்கமாக திட்டடினர்.

பௌத்த பிக்குவை கீழ்தரமாக பேசினார். இப்படியானவர்கள் மருத்துவ சங்கத்தில் இருக்க தகுதியற்றவர்கள் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என குறிப்பிட்ட அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்கள் சமூகத்தில் பேசப்பட்டு வரும் நபர்களில் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றார்.

Latest Offers