ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தேர்தல் போர்: மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்

Report Print Mubarak in அரசியல்

நாட்டில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தேர்தல் போர் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் "அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" வேலைத் திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தோப்பூர் அல் பலாஹ் வித்தியாலயத்திற்கான ஆசிரியர் விடுதி இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இந்நாட்டில் பட்டதாரிகளுக்கும், இளைஞர்களுக்கும் வழிகாட்டிய அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவே பிரதம மந்திரி இளைஞர் விவகார அமைச்சராக இருந்த போது பல சேவைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்நிகழ்வில் கனியமணல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் அப்துல் றசாக் நளீமி, பாடசாலை அதிபர் ஏ.மஹ்சப், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர்

யூ.எல்.ஏ.காசீம் , மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான ஜெஸீலா, றிபாஸ், வெருகல் பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீகாந்த் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தார்.

Latest Offers