சுதந்திரக் கட்சியுடன் இணக்கம் காணப்படவில்லை: ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி

Report Print Kamel Kamel in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த, நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்திருந்தார்.

எனினும், இவ்வாறான எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என ஷெஹான் சேமசிங்க இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இரண்டு கட்சிகளுக்கும் இடையில் வெற்றிகரமாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் கூட்டணியாக இணைந்து போட்டியிடுவது குறித்து இதுவரையில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவருடைய கட்சியான சுதந்திரக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக பெயரிட்டுள்ளது.

எனினும் இந்த விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எவ்வித இணக்கப்பாடுகளையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.