மைத்திரி - ரணில் - கோத்தபாய தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்படுவார்கள்: சரத் பொன்சேகா

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட மேலும் சிலர், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரித்து வரும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழு சம்பந்தமாக கம்பஹாவில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான முன்னாள் அமைச்சர்கள் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்பட உள்ளனர். இதன் பின்னர், நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நிறைவடையும்.

அதேவேளை நாட்டின் பாதுகாப்பை ஜனாதிபதி தற்போது சிக்கலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.