நான்கரை ஆண்டுகளில் நாடு அழிந்து போனது: மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஏனைய இன மக்களின் வாக்குகள் தேவையில்லை என சில நபர்கள் தவறான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசியலில் ஈடுபடும் எவரும் வேறு இனத்தவர்களின் வாக்கு அவசியமில்லை எனக் கூற மாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

நுகேகொடையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளை பார்க்கும் போது, நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்திக்கவும் பயமாக இருக்கின்றது. கடந்த நான்கரை ஆண்டுகளில் நாடு அழிந்து போனது.

ஒரு அரசாங்கம் இப்படி நடந்து கொள்ள முடியும் என்பது ஆச்சரியம். கடந்த அரசாங்கங்களிலும் இப்படியான பிரச்சினைகள் இருந்தன. அவர்கள் அவற்றை சரியான முறையில் முகாமைத்துவம் செய்தனர்.

எனினும், தற்போதைய அரசாங்கம் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது.

நாட்டுக்கு மட்டுமல்ல, எந்த மதங்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை. பிள்ளைகளுக்கு உடல் நிலை சரியில்லை என்ற தந்தைக்கு பாடசாலைக்கு செல்ல முடியாது, இராணுவம் சுட்டுக்கொலை செய்யும். தனது பிள்ளை பார்க்க செல்ல முடியவில்லை என்றால், யாருக்கு உரிமையுள்ளது.

பொதுஜன பெரமுனவுக்கு வேறு இனத்தவரின் வாக்குகள் தேவையில்லை என்று தற்போது பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதனை ஏற்றுக்கொண்டு செயற்படுபவர்களும் இருக்கின்றனர்.

அரசியல் கட்சிக்கு வாக்கு தேவையில்லை என்று யார் கூறுவார். இது பச்சை பொய். ஐக்கிய தேசியக் கட்சி தனது கட்சியின் நெருக்கடியை மூடி மறைக்க இப்படியான பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.