அடிப்படைவாதம் சவுதியில் இருந்தே வருகிறது - அமைச்சர் நவீன் திஸாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

தான் சிங்கள பௌத்தர்களுக்காக போராடும் பலமிக்க அமைச்சர் எனவும் எனினும் ஏனைய சகோதர இனங்களை காலால் மிதிக்கும் முயற்சி தன்னிடம் இல்லை எனவும் பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிலாபம் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

முகத்தை மூடும் ஹிஜாப் சவுதி அரேபியாவில் இருந்து இலங்கைக்கு வந்தது. இஸ்லாமிய அடிப்படைவாதம் சவுதி அரேபியாவில் இருந்தே இலங்கைக்கு வருகின்றது.

சவுதி அரேபியா குறித்து நானே முதலில் பேசுகிறேன். அத்துடன் நான் கடுமையான தீர்மானத்தை எடுக்க விரும்புகிறேன். எனக்கு அந்த நாற்காலியில் அமர அதிஷ்டம் கிடைத்தால், சவுதி அரேபியாவுக்கு ஒரு இலங்கையரை கூட அனுப்ப மாட்டேன்.

எந்த பொருளாதார நஷ்டத்தை நிறுத்த நாட்டுக்கு முடியுமாக இருக்க வேண்டும். தேவையான இடத்தில் அடிக்காமல் எப்போதும் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது. காயை குறிபார்த்து அடிக்க வேண்டும் எனவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.