ஐந்து ஆண்டுகளில் இலங்கையை முன்னேறிய நாடாக மாற்ற முடியும்! பிரதமர் நம்பிக்கை

Report Print Steephen Steephen in அரசியல்

கடன் சுமையில் இருந்து விடுப்படுவதற்காக ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி செல்ல வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ருவான்வெல்லையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டு நாடு ஒன்றை கட்டியெழுப்ப முடியாது. அனைவரும் இணைந்து புதிதாக சிந்தித்து நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் அவை எடுத்த முயற்சிகள் மூலமே முன்னேறின. புதிதாக சிந்தித்து பணியாற்றினால், 5 ஆண்டுகளில் இலங்கையை இந்து சமுத்திரத்தில் முன்னேறிய நாடாக மாற்ற முடியும்.

2050 ஆண்டளவில் தகவல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் எப்படி இருக்கும் என்று எம்மால் கணிக்க முடியாது. தற்போதில் இருந்தே நாம் தயாராகி முன்னோக்கி செல்ல வேண்டும்.

ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகள் ஏற்றுமதி மூலம் முன்னேறின. அத்துடன் தேராவாத பௌத்த நாடாக தாய்லாந்து, முதலீடுகள் மூலம் முன்னேறியது. பௌத்த நாடாக இலங்கையிலும் நாம் முன்னேற்றத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

எமது பிரச்சினைகளில் இருந்து நாம் மீள வேண்டும். வேறு நாடுகள் எம்மை மீட்காது. எதிர்காலத்தை பற்றி சிந்தித்து ஒன்றாக இணைந்து முன்னேறிச் செல்ல எமக்கு பலம் இருக்க வேண்டும்.

நாம் எப்போதும் கடந்த காலத்தை பற்றி பேசிக்கொண்டு, தேசிய நோக்கத்தில் செயற்படாமல், இன, மத பேதங்களை ஏற்படுத்திக்கொண்டு செயற்பட்டால்,நாட்டுக்கே பாதிப்பு ஏற்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.